அப்பா,
நான் நிறைய தடவை யோசிக்காம என்னனமோ பேசிறிக்கேன், உங்களை மனசார திட்டிருக்கேன். நான் ஆசைப்பட்டதை நீங்க நிராகரிச்ச போதெல்லாம் இது நடந்திருக்கு. மகன் நல்ல காலேஜ் போகணும், நல்லா படிக்கணும் ,நல்ல வேலைக்கி போகணும், கை நிறைய சம்பாதிக்கணும், ஒரு நல்ல நிலைமைக்கு வரணும், கல்யாணம் பண்ணி பார்க்கனும்னு உங்களுக்கு எவ்வளவோ பொறுப்புபா.. உங்களுக்குன்னு இல்ல.. ஒவ்வொரு சராசரி அப்பாவுக்கும் இது இருக்கும்னு இப்போ புரியுதுபா.
நான் என்றைக்குமே உங்க கனவுகளை அழிக்கணும்னு நினைச்சதே இல்லபா.. கவுன்சிலிங்ல உங்களோட விருப்பத்துக்கு மாறாக நான் மெக்கனிக்கல் படிப்ப எடுத்திருந்தா நீங்க ஒடிஞ்சு போயிருவீங்கனு நல்லா தெரியும்பா. நீங்க விருப்பப்பட்ட படிப்ப நான் எடுத்தும் உங்களுக்கு எவ்ளோ சந்தோஷம்!! எனக்கு இப்போ நெனச்சாகூட கண் கலந்குதுபா.பையன் சாதிசிட்டான்னு உங்களுக்கு ரொம்ப பெருமையாவும், சந்தோஷமாவும் இருந்துச்சுப்பா அப்போ. ஆனால், இன்னைக்கி அதை நினைக்கிறப்போ வலிக்குதுபா. நீங்க படிக்கல. அதனாலதான்பா உங்களுக்கு அந்த படிப்போட அருமை என்னனு தெரிஞ்சி என்னைய கஷ்டப்பட்டு படிக்க வச்சீங்க. அந்த உணர்வுக்கு மதிப்பு கொடுத்துதான்பா நீங்க ஆசைப்பட்ட மாதிரியே,உங்களை திருப்தி படுத்துற முயற்சியில என்னோட கனவுகளையும், ஆசைகளையும் மொத்தமா புதைச்சிட்டு, இதோ இன்னைக்கி கீபோர்டு-அ தட்டிக்கிட்டு ஒரு இயந்திர மனிதனா சுத்திகிட்டு இருக்கேன். அதுவும் நீங்க பக்கத்துல இல்ல. உங்களை பாத்துக்ககூட முடியல.
நீங்க சாப்பிட்டீங்களோ இல்லையோ, ஒவ்வொரு தடவையும் நீங்க என்கிட்டே சாப்பிட்டயா'ன்னு கேட்கும்போது, நம்ம எல்லாரும் ஒண்ணா சாப்பிட்டதுதான்பா ஞாபகத்துக்கு வரும்.உங்க கூட நான் அங்கே இல்லையேங்கற வருத்தம்தான் மிஞ்சும், அதனாலேயே நான் பாதி நாள் உங்களை கூப்பிட்டு பேசுறதுகூட இல்ல.ரெண்டு நாள் லீவுக்கு ஊருக்கு வர்றதே, நீங்க என்னைய எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கறதும், என்னைய பார்த்ததும் உங்க முகத்துல ஒரு சந்தோஷம் தெரியுமே.நான் சம்பாதிக்கிறதெல்லாம் ஒரு பொருட்டாவே படாதுப்பா.
எப்படியோப்பா.. மகனுக்கு எல்லாமே நல்லபடியா அமைஞ்சிருச்சுனு நீங்க சந்தோஷமா இருக்கலாம். ஆனால்,நினைச்ச படிப்பு கிடைக்காத வருத்தம், பிடிக்காத ஒரு வேலை, சாதிக்கிற சந்தோஷம் இல்லாம ஒரு சம்பளம்னு என் வாழ்க்கை தொலைஞ்சே போச்சுப்பா. இனி,நான் மறுபடியும் பிறந்து வந்தாலும் நினைச்சது கிடைக்காது. இதுவரைக்கும் உங்க முகத்துக்கு நேரா சொல்ற தைரியம்கூட வரல. தொண்டையிலயே விக்கிக்கிட்டு நின்றுதுபா.
ஆனால், இது எனக்கொரு பாடம். அனாவசியமா என் பிள்ளையோட தலையில என்னோட கனவு, ஆசை, எதையும் நான் திணிக்க மாட்டேன். எந்த ஒரு சூழல்லயும் என் பையன் காலம் பூரா அழக்கூடாதுப்பா. சந்தோஷத்த தொலைச்சுட்டு,சந்தோஷமா இருக்குற மாதிரி அவன் தன்னை அடையாளம் காட்டிக்க கூடாதுன்னு நான் கவனமா இருப்பேன்பா!
ஒண்ணு அழணும், இல்லை, மனசுல இருக்கறத கொட்டிறனும். அழுகறது தினமும், நான் படுக்கறதுக்கும் தூங்கறதுக்கும் இடையில நடக்கும்பா.மனசுல இருக்கறத கொட்டி தீர்க்க மனுஷங்ககிட்ட சொன்னா 'இதெல்லாம் சகஜம்பா'ங்கற பதிலோட காத்துக்குட்டு இருக்காங்கப்பா. அதனாலதான் இந்த லெட்டர எழுதுறேன். ஆனால், இப்போக்கூட எனக்கு இதை உங்ககிட்ட காட்டணும்னு தோணல.எங்க, நீங்க என்னைய நான் ஆசைப்பட்ட மாதிரி வளர்க்காம,என்னைய கஷ்டபடுத்திடீங்கன்னு, வருத்தப்படுவீங்கலோனு பயம்பா. இந்த லெட்டர் உங்களை வந்து சேராது. ஏன்னா, இது நான் எழுதுறதுபா! எழுத்துல மெய் இருக்கும்பா, ஆனால் உயிர் இருக்காது:(
எனக்குன்னு வாழ்க்கையில எவ்வளவோ செஞ்சுருக்கீங்க.எல்லாமே என்னோட நல்லதுக்காக மட்டும்!! எனக்கு புடிச்சதுல இருந்து, நீங்க ஆசைப்பட்டத அடைய முடியாத வரைக்கும் எல்லாமே எனக்கு கிடைக்கிற மாதிரி செஞ்சுருக்கீங்கபா..என் வாழ்க்கைய பத்தி நல்லா யோசிச்சி, நான் எப்படி வரணும்னு நீங்க ஆசைப்பட்டு வரைஞ்ச கோட்ட விட்டு நான் கொஞ்சமும் வெளில வரல.. இது பயத்தால இல்ல.. உங்க மேல இருக்குற மரியாதைபா!
நான் நிறைய தடவை யோசிக்காம என்னனமோ பேசிறிக்கேன், உங்களை மனசார திட்டிருக்கேன். நான் ஆசைப்பட்டதை நீங்க நிராகரிச்ச போதெல்லாம் இது நடந்திருக்கு. மகன் நல்ல காலேஜ் போகணும், நல்லா படிக்கணும் ,நல்ல வேலைக்கி போகணும், கை நிறைய சம்பாதிக்கணும், ஒரு நல்ல நிலைமைக்கு வரணும், கல்யாணம் பண்ணி பார்க்கனும்னு உங்களுக்கு எவ்வளவோ பொறுப்புபா.. உங்களுக்குன்னு இல்ல.. ஒவ்வொரு சராசரி அப்பாவுக்கும் இது இருக்கும்னு இப்போ புரியுதுபா.
நான் என்றைக்குமே உங்க கனவுகளை அழிக்கணும்னு நினைச்சதே இல்லபா.. கவுன்சிலிங்ல உங்களோட விருப்பத்துக்கு மாறாக நான் மெக்கனிக்கல் படிப்ப எடுத்திருந்தா நீங்க ஒடிஞ்சு போயிருவீங்கனு நல்லா தெரியும்பா. நீங்க விருப்பப்பட்ட படிப்ப நான் எடுத்தும் உங்களுக்கு எவ்ளோ சந்தோஷம்!! எனக்கு இப்போ நெனச்சாகூட கண் கலந்குதுபா.பையன் சாதிசிட்டான்னு உங்களுக்கு ரொம்ப பெருமையாவும், சந்தோஷமாவும் இருந்துச்சுப்பா அப்போ. ஆனால், இன்னைக்கி அதை நினைக்கிறப்போ வலிக்குதுபா. நீங்க படிக்கல. அதனாலதான்பா உங்களுக்கு அந்த படிப்போட அருமை என்னனு தெரிஞ்சி என்னைய கஷ்டப்பட்டு படிக்க வச்சீங்க. அந்த உணர்வுக்கு மதிப்பு கொடுத்துதான்பா நீங்க ஆசைப்பட்ட மாதிரியே,உங்களை திருப்தி படுத்துற முயற்சியில என்னோட கனவுகளையும், ஆசைகளையும் மொத்தமா புதைச்சிட்டு, இதோ இன்னைக்கி கீபோர்டு-அ தட்டிக்கிட்டு ஒரு இயந்திர மனிதனா சுத்திகிட்டு இருக்கேன். அதுவும் நீங்க பக்கத்துல இல்ல. உங்களை பாத்துக்ககூட முடியல.
நீங்க சாப்பிட்டீங்களோ இல்லையோ, ஒவ்வொரு தடவையும் நீங்க என்கிட்டே சாப்பிட்டயா'ன்னு கேட்கும்போது, நம்ம எல்லாரும் ஒண்ணா சாப்பிட்டதுதான்பா ஞாபகத்துக்கு வரும்.உங்க கூட நான் அங்கே இல்லையேங்கற வருத்தம்தான் மிஞ்சும், அதனாலேயே நான் பாதி நாள் உங்களை கூப்பிட்டு பேசுறதுகூட இல்ல.ரெண்டு நாள் லீவுக்கு ஊருக்கு வர்றதே, நீங்க என்னைய எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கறதும், என்னைய பார்த்ததும் உங்க முகத்துல ஒரு சந்தோஷம் தெரியுமே.நான் சம்பாதிக்கிறதெல்லாம் ஒரு பொருட்டாவே படாதுப்பா.
எப்படியோப்பா.. மகனுக்கு எல்லாமே நல்லபடியா அமைஞ்சிருச்சுனு நீங்க சந்தோஷமா இருக்கலாம். ஆனால்,நினைச்ச படிப்பு கிடைக்காத வருத்தம், பிடிக்காத ஒரு வேலை, சாதிக்கிற சந்தோஷம் இல்லாம ஒரு சம்பளம்னு என் வாழ்க்கை தொலைஞ்சே போச்சுப்பா. இனி,நான் மறுபடியும் பிறந்து வந்தாலும் நினைச்சது கிடைக்காது. இதுவரைக்கும் உங்க முகத்துக்கு நேரா சொல்ற தைரியம்கூட வரல. தொண்டையிலயே விக்கிக்கிட்டு நின்றுதுபா.
ஆனால், இது எனக்கொரு பாடம். அனாவசியமா என் பிள்ளையோட தலையில என்னோட கனவு, ஆசை, எதையும் நான் திணிக்க மாட்டேன். எந்த ஒரு சூழல்லயும் என் பையன் காலம் பூரா அழக்கூடாதுப்பா. சந்தோஷத்த தொலைச்சுட்டு,சந்தோஷமா இருக்குற மாதிரி அவன் தன்னை அடையாளம் காட்டிக்க கூடாதுன்னு நான் கவனமா இருப்பேன்பா!
ஒண்ணு அழணும், இல்லை, மனசுல இருக்கறத கொட்டிறனும். அழுகறது தினமும், நான் படுக்கறதுக்கும் தூங்கறதுக்கும் இடையில நடக்கும்பா.மனசுல இருக்கறத கொட்டி தீர்க்க மனுஷங்ககிட்ட சொன்னா 'இதெல்லாம் சகஜம்பா'ங்கற பதிலோட காத்துக்குட்டு இருக்காங்கப்பா. அதனாலதான் இந்த லெட்டர எழுதுறேன். ஆனால், இப்போக்கூட எனக்கு இதை உங்ககிட்ட காட்டணும்னு தோணல.எங்க, நீங்க என்னைய நான் ஆசைப்பட்ட மாதிரி வளர்க்காம,என்னைய கஷ்டபடுத்திடீங்கன்னு, வருத்தப்படுவீங்கலோனு பயம்பா. இந்த லெட்டர் உங்களை வந்து சேராது. ஏன்னா, இது நான் எழுதுறதுபா! எழுத்துல மெய் இருக்கும்பா, ஆனால் உயிர் இருக்காது:(

No comments:
Post a Comment