பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Jan 10, 2011

உன்னுடன் கனிந்த மரணங்கள்..



மழலை மலராய்..
பூமியில்..
ரோஜாமலர் ஒன்று..
பாதம் பதித்ததாய்..
மனதோடு..
மனித இதழ்களோடு..
நானும்..
புன்னகைத்த ஞாபகம்..
உன் ஸ்பரிசத்தில்!!

மொட்டொன்று
மலர்கையில்..
வாடிடும் பூவொன்று..
ஆனந்தம் கண்ட..
ஞாபகம்!
முழு மொட்டாக நீ..
இதழ் திறந்து..
ஆனந்தம் கண்டாலும்..
உன் பிரிவால் வாடிடும்..
பூவாக நான்!!

வானில் அழியாத..
வெண்ணிலவாய்..
ஒரு கனவாய்..
வாழ்வின் வடுவாய்..
என் மனதிலே நீ!!!
ஆனாலும்-
என் நாட்களின் நீளம்..
குறையாது!
உன்னுடன் கனிந்த..
என் மரணங்கள்..
என்றும் மறையாது!!!

No comments:

Post a Comment