பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Jan 23, 2011

ஒளி தர வாராயோ?


உனை நினைத்துப் பார்த்தால்..
புன்னகை பூமழை கொட்டும்..

அருகிலில்லை என்றுணரும்போது..
புத்தி மனதை தட்டும்..
விழி வழி கண்ணீர் கிட்டும்!

பிரிவு நம்மை
வரவேற்றபோது..
தைரியமாகத்தான்
உபசரித்தேன்..
உனைப் பிரிந்து!
தடம் மாறவில்லை இன்றும்..
ஆனால்-
தடுமாறுகிறேன்!


சூழலை எனக்கேற்றவாறு..
மாற்றிக்கொண்டாயிற்று!
பழிதீர்க்க
ப்
படுகிறேன்

என்பதை..
யாரிடம் சொல்வேன்?
உன்னை தவிர்த்து!


உலகம் புரிகிறது எனக்கு..
என்னை புரியவில்லை..
உலகிற்கு!
என் தவறோ?
யார் தவறோ?
தெரியவில்லை!
பிரபஞ்சம் எனக்கு இருள்கிறது..
ஒளி தர வாராயோ தோழா???

No comments:

Post a Comment