காற்றினில் நடந்தேன்..
நான் தரையில் இருப்பது
தெரியாமல்!
மெய் நீயா?
என்னுள் நீ பொய்யா?
குழப்பம் கண்டேன்..
ஒரு கானல் நீராய்!
கேட்பது ஒன்றும்..
செய்வது இன்னொன்றும்..
உன்னால் நான் படும் பாடு..
ஒவ்வொரு நாளும் முரண்பாடு!
நினைவில் தவழ்வது
இன்பமாய் கடந்தாலும்..
நிஜம்போல் அது ஆகாது..
நிழல் நெஞ்சில் தங்கிடாது!
கண்ணாளனே..
என்னாளனே..
சொல்லும் வரை
மனதுக்குள் வலி..
காதல் சொன்னால்தான் தெரியும்
என் வாழ்க்கைக்கு வழி!
.jpg)

/// நிழல் நெஞ்சில் தங்கிடாது... // அருமை... உண்மை...
ReplyDeleteநன்றி :)
Delete