பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Dec 16, 2013

வியாபாரம்!





மனம் பார்த்து..
மணம் காணும்
காலம் இன்று இல்லை!
திருமணம் கண்டு பின்
மனம் பார்க்கும்
காலமும் இன்று இல்லை!
கலிகாலம் என்று
பழி சொல்லிட
முடியாதெனினும்...
அதுவே உண்மை
என்று ஒப்புக்கொள்ளும் 
நிலை!

பெண்ணுக்கு பிடித்தால்
பிள்ளைக்கு விருப்பமில்லை..
பிள்ளைக்கு பிடித்தால்
பெண்ணுக்கு பிடித்தமில்லை..
யாருக்கும் வருத்தமில்லை இதனால்..
ஏனெனில் இன்றைய சந்தையில்
ஒன்று போனால் உண்டு
இன்னொன்று!

பெற்றோருக்கும் சரி..
மற்றோருக்கும் சரி..
வாயினில் மெல்லும்  
அவல்போலத்தான்..
அவளும் அவனும்!
ஆனால் மடியினில்
கணம் என்று..
அரிதாரம் பூசிக்கொள்வர்!
கடமை என்று பெயர் சொல்வர்!

படிப்பினை பார்ப்பர்..
வேலை என்னவென்று கேட்பர்..
சம்பள விபரங்கள் குறிப்பர்..
பொன் பொருள் கணிப்பர்!
மெய்ப்பொருள் காண்பர்
எல்லாம் முடிந்த பின்னே!
இதில் ஆணும் பெண்ணும் சமமே!
எல்லா சாதகங்களும்
அறிந்த பின்னே
ஜாதகங்கள் பரிமாரிடும்
கல்யாணம் என்னும் 
வியாபாரம்!

சொர்க்கத்தில் நிச்சயமானாலும்
சமூக நரகத்திற்குள்
சுபமுகூர்த்தம் பார்த்து தள்ளப்படும்
வைபவம் இது!

சொந்தமும் பந்தமும்
நட்பும் சுற்றமும்
சூழ்வதற்க்கே ஒழிய
உடன் வாழ்வதற்கு அல்ல!

உனக்காக ஒரு மனம்
வாழ துணிந்தால்
தேவையில்லை
எவர் சம்மதமே!
ஊருக்காக ஒரு திருமணம்
என்று விதியிருந்தால்
எந்நிலையிலும் தலை சாய்ந்திடாதே
திரு.மனமே!

4 comments:

  1. அருமை... இன்றைக்கு வரிகள் உண்மை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Nandraga ezhudhi ullai nanba!!

    ReplyDelete
  3. Super... No words to describe... got the link through your friend Sethu! Romba arumaya irukku..

    ReplyDelete