பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

May 4, 2011

அட்டவணை

இம்மையில் 
கடவுள்..
நன்மையில்..
சொந்தமும்...
சுற்றமும்!!

விடியலுக்கின்றி..
வேலைக்கும்.
சம்பளத்திற்கும்..
தேவை இங்கே..
கல்வி!!

வெட்டிபேச்சும்..
வீண்பெருமையும்..
அடக்கம்..
மற்றவரிடம் நீ..
அடங்காதிருக்க!!

வெற்றிக்கு..
ஒரு வீழ்ச்சி...
அதுவும்...
சமூகம் உன்னை..
அடையாளம் காண..
நீ மேற்கொள்ளும்..
ஒரு முயற்சி!!!


கடனுக்கு..
ஒரு வீடு!!
காப்பாற்ற..
ஒரு நண்பன்!!
கடமைக்கு..
ஒரு கல்யாணம்!!
பெருமைக்கு..
செல்வங்கள்!!
பெயர் சொல்ல..
பிள்ளைகள்!!
காரியமாக..
லஞ்சம்!!

சில நேரங்களில்..
படைத்தவனுக்கும்..
வருத்தம்!!
தன்னலம் மட்டும்..
தலையில் சுமந்து..
இயலாதவனுக்கு
உதவாமல்..
நீ வாழும்..
ஒரு-
அட்டவணை வாழ்க்கை..
கண்டு!!