பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Apr 10, 2011

ஆயுள்வரை..


நிஜம் அழிந்த பிறகு..
நிழலும் ஒரு..
பிணம் அல்லவோ?
மண்ணில் மழைத்துளி..
மடிவது போல்..
உன் ஒவ்வொரு..
நினைவிலும்..
வாழ்வில் ஒடிகின்றேன்!

கண்ணீரும் இல்லை..
காயங்களும் இல்லை..
ஆனாலும்-
கண்ணாடியில் தெரிவது...
என் உடைந்த முகமோ..
மரத்த மனமோ?

நேசித்த ஓர் உயிர்..
என் முன்னே தொலைகிறது..
ஞாபகங்கள்..
ஒன்றா..இரண்டா..
மனம் தொலைந்த பின்னும்..
என் உயிர்வரை..
தொடர்கிறது!!

இது..
காதலெனும்...
காயமழை!
நனையவிட்டால்..
இதயம் சிதையும்..
ஆயுள்வரை!